குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் புதிய வேலைத்திட்டம் – விவசாய அமைச்சு நடவடிக்கை!
Monday, July 10th, 2023
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் அந்த குடும்பங்களுக்கு ஆடுகளை விநியோகிக்கும் வேலைத்திட்டத்தை விவசாய அமைச்சு ஆரம்பித்துள்ளது.
ஐந்து வருடங்களில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இவ்வாறு 70,000 ஆடுகள் விநியோகிக்கப்படவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவின் பங்கேற்புடன் ரன்ன, வடிகல பிரதேசத்தில் இந்த வேலைத்திட்டம் இன்று(09) ஆரம்பமானது.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் மூன்று ஆடுகள் வீதம் வழங்கப்படும் நிலையில், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஸ்தாபிக்கப்பட்ட 07 விவசாய தொழில்முனைவோர் கிராமங்களில் தலா 10 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு ஆடுகள் விநியோகிக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
.
Related posts:
சுற்றாடலுக்கான 2017 ஜனாதிபதி விருதுக்கு விண்ணப்பங்கள் கோரல்!
அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்தை மீண்டும் செயற்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கை - துறைசார் தரப்பினருக...
எவரையும் கைவிடாதீர்கள் நலன்புரித் திட்டத்திற்கு 23 இலட்சம் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன - நலன்புரி நன்...
|
|
|


