அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்தை மீண்டும் செயற்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கை – துறைசார் தரப்பினருக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ பணிப்பு!

Friday, June 11th, 2021

நல்லாட்சி அரசாங்கத்தின் திறனற்ற முகாமைத்துவம் மற்றும் நிதி முறைகேடு காரணமாகப் பல இழப்புகளை எதிர்கொண்டுள்ள அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்தை – மீண்டும் செயற்படுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு துறைசார் தரப்பினருக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ பணித்துள்ளார்.

இலங்கை அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்தின் தற்போதைய நிலை குறித்து அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு பணிப்புரை  விடுத்துள்ளார்.

இதன்போது அவர்’ மேலும் கூறுகையில் – கடந்த “நல்லாட்சி”அரசாங்கத்தின் போது அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனம் மூலம் பல திட்டங்கள் தன்னிச்சையாகச் செயல்படுத்தப்பட்டுள்ளன என்பதும் அதன் மூலம் கிடைக்க வேண்டிய பல பில்லியன் கணக்கான பணம் இதுவரை பொறியியல் கூட்டுத்தாபனத்தினால் அறவிடப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது..

அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்தை மீண்டும் செயல்படுத்துகையில், இதுவரை நிறுத்தப்பட்ட திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்க, பேச்சுவார்த்தைகளின் மூலம் ஒரு பொதுவான முடிவு எடுக்கப்பட வேண்டும் என்பதுடன் இடைநிறுத்தப்பட்டுள்ள தின்டங்களை மீண்டும் தொடங்குவதற்குத் தேவையான நிதி உதவி் தொடர்பாக – சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவிக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே குறித்த சந்திப்பின்போது

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகத்தை நிர்மாணிப்பதற்காக அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்தின் சேவைகள் பெறப்பட்டுள்ளன என்றும், அதற்கு இதுவரை எந்த கட்டணமும் செலுத்தப்படவில்லை என்றும் பொறியியல் கூட்டுத்தாபனத்தின் மேலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் நல்லாட்சி அரசாங்கம் தகுதிகள் இல்லாமல் நியமனங்கள் மற்றும் பதவி உயர்வுகளை வழங்கியமையால் அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்தில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்பதனையைம் கூட்டுத்தாபன மேலாளர்கள் பிரதமரிடம் இதன்போது சுட்டிக்காட்டினர்.

அத்துடன் இன்றைய பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ ஜனாதிபதியாக சேவையாற்றிய காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டிருந்த பல அபிவிருத்தி திட்டங்கள் “நல்லாட்சி “அரசாங்கத்தினால் நிறுத்தப்பட்டமையால் பொறியியல் கூட்டுத்தாபனம் ஸ்தம்பிக்கப்பட்டதாக மேலாளர்கள் குறிப்பிட்டனர்.

பேலியகொட சீ சிட்டி (C-City) சந்தை வளாகம் இவ்வாறு கைவிடப்பட்ட ஒரு முக்கிய வேலைத்திட்டம் என வெளிப்படுத்தப்பட்டதுடன் பிரதமரின் அறிவுரைக்கு அமைய கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த மற்றும் பிரதமர் செயலக பணிக்குழாம் பிரதானி யோஷித ராஜபக்க்ஷ ஆகியோரின் மேற்பார்வையில் மேற்படி சந்தை வளாக நடவடிக்கை அண்மையில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

இதனிடையே ‘குறித்த சந்திப்பு பொறியியல் கூட்டுத்தாபனத்திற்கு மிகவும் அதிஷ்டமான நேரம் வருவதைக் காட்டுவதாக சுட்டிக்காட்டியிருந்த கூட்டு தொழிற்சங்க மையத்தின் தேசிய அமைப்பாளர் பிரேமலால் பெரேரா எங்களை பணியிடத்திலிருந்து நீக்கிய “நல்லாட்சி” பின்னர் ஒரு கொடிய ஆட்சியாக மாறியது. என்றும் அவர்களிடமிருந்து ஒர் அரசு நிறுவனம் கூட தப்பியிருக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: