ஐ.நா. அமைதிகாக்கும் படைக்கு 69 பொலிஸ் உத்தியோகத்தர்கள்!
Thursday, April 11th, 2019
இலங்கையின் 69 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படையில் இணைவதற்கு தகுதி பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.
கடந்த 02ம் திகதி இடம்பெற்ற தெரிவுப் பரீட்சையில் இந்த பொலிஸ் அதிகாரிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், மகளிர் பிரதம பொலிஸ் பரிசோதகர்கள், பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் பொலிஸ் சார்ஜென்ட்கள் உள்ளிட்டவர்கள் இதில் தகுதி பெற்றுள்ளனர்.
இது சம்பந்தமான பரீட்சைக்கு 250 பொலிஸ் அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வெற்றிக்களிப்புடன் ஓய்வுபெற்றார் மாலிங்க!
நிதி நெருக்கடி - வேதனம் வழங்குவதற்கு கூட அரசாங்கத்திடம் நிதி இல்லை - அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவ...
பச்சிலைப்பள்ளி பகுதியில் நிலக்கண்ணிவெடி அகற்றப்பட்டுள்ள நிலப்பரப்பு விரைவில் கையளிக்க நடவடிக்கை!
|
|
|


