தோழர் திரவியத்தின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி மரியாதை செலுத்திய செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
Friday, April 17th, 2026
அமரர் சிவரத்தினம் லிங்கேஸ்வரனின் (தோழர் திரவியம்) பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம் சாத்தி மலர்மாலை அணிவித்து இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தியுள்ளார்.
வுடமராட்சி வெற்றிலைக்கேணி பிரதேசத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்; தீவிர செயற்பாட்டாளராக செயற்பட்டுவந்த அமரர் சிவரத்தினம் லிங்கேஸ்வரன் வயது மூப்பின் காரணமாக காலமானார்.
இந்நிலையில் வெற்றிலைக்கேணி முள்ளியானில் உள்ள அன்னாரது இல்லத்தில் பூதவுடல் அஞ்சலிக்கா வைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு சென்றிருந்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, பூதவுடலுக்கு தனது இறுதி அஞ்சலியை செலுத்தியதுடன் அமரரது குடும் உறவுகளுக்கு தனது ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்திருந்தார்.
அத்துடன் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம். யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன், கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் தோழர் குமார் உள்ளிட்ட பலரும் அன்னாருக்கு அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2009 ஆம் ஆண்டு யுத்தாம் நிறைவுக்கு வந்த பின்னர் வெற்றிலைக்கேணி இடைத்தங்கல் முகாமிலிருந்த அவர் அங்கிருந்து சமூகத்துடன் இணைந்த நாளிலிருந்து ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தீவிர செயற்பாட்டாளராக தன்னை இணைத்து செயற்பட்டுவந்த நிலையில் அவர் காலமானமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


