தோழர் சுமனின் தாயாரது பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் அஞ்சலி மரியாதை!
Thursday, January 16th, 2025
அமரர் தர்மலிங்கம் சரஸ்வதி அவர்களது பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை செலுத்தினார்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வடமராட்சி தெற்கு- மேற்கு , கரவெட்டி பிரதேச சமரபாகு – 03 ஆம் வட்டார செயலாளர் தர்மலிங்கம் சுமன் அவர்களுடைய அன்புத் தாயாரான அமரர் தர்மலிங்கம் சரஸ்வதி நேற்றையதினம் வயது மூப்பின் காரணமாக காலமானார்.
இந்நிலையில் அன்னரது இல்லத்துக்கு இன்றையதினம் சென்றிருந்த செயலாளர் நாயகம் பூதவுடலுக்கு மலர்வளையம் சாத்தி அஞ்சலி மரியாதை செலுத்தினார்.
அத்துடன் அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு தமது ஆறுதலையும் அனுதபத்தையும் தெரிவித்துக் கொண்டார்.
இதன்போது கட்சியின் செயலாளர் நாயகத்துடன் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டு அமரருக்கு அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


