தோழர் குமாரின் தந்தையாரின் பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை!

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பருத்தித்துறை – முனை பிரதேச நிர்வாக செயலர் தோழர் குமார் அவர்களின் தந்தையார் அமரர் சிங்கராசா அந்தோனிப் பிள்ளையின் பூதவுடலுக்கு ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தனது இறுதி அஞ்சலி மரியாதையை செலுத்தினார்.
இறுதிக் கிரியைகள் இன்று அவரது இல்லத்தில் நடைபெற்ற நிலையில் அன்னாரது இல்லத்திற்கு சென்றிருந்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பூதவுடலுக்கு மலர்மாலை அணிவித்து இறுதி அஞ்சலிமரியதை செலுத்தியதுடன் குடும்பத்தினருக்கு தனது ஆறுதலையும் அனுதாபத்தையும் செலுத்தினார்.
இதன்போது கட்சியின் தோழர்கள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு தமது இறுதி மரியாதையைச் செலுத்தியிருந்தனர்.
முன்பதாக கட்டுவன் மேற்கை சேர்ந்த அமரர் சற்குணம் வரதன் என்ற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளரின் இறுதி கிரிகைகளில் கலந்து கொண்ட செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ தேவானந்தா அவர்கள், அன்னாரின் பிரிவினால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|