இலங்கை உயர்கல்வி முறைமை பல்லாயிரக்கணக்கான இளைஞ ர்களுக்கு துரோகம் இழைக்கி ன்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Tuesday, November 21st, 2017

நாட்டின் உயர் கல்வி தொடர்பில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டியுள்ளது. அத்தகையதொரு மாற்றத்தினை கொண்டு வராத பட்சத்தில், பல்லாயிரக் கணக்கான இளைஞர்களுக்கு துரோகம் இழைக்கின்ற பாவத்திலிருந்து எமது கல்விக் கட்டமைப்புகளை காப்பாற்ற இயலாமலேயே போய்விடும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றைய தினம் உயர் கல்வி, நெடுஞ்சாலைகள் அமைச்சு மற்றும் திறன்கள் அபிவிருத்தி, தொழிற் பயிற்சி அமைச்சு ஆகிய இரு அமைச்சுக்கள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்

மேலும் அவர் தெரிவிக்கையில் –

உலக பல்கலைக்கழகங்களின் தரப்படுத்தலின் பிரகாரம், இலங்கையிலுள்ள உயர்மட்ட பல்கலைக்கழகங்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதாக 2018ஆம் ஆண்டுக்கான சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஆசிய பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பார்க்கின்றபோது, கொழும்பு பல்கலைக்கழகம் 156வது இடத்திலும், பேராதனைப் பல்கலைக்கழகம் 242வது இடத்திலும் இருப்பதாகத் தெரிய வருகின்றது. உலகில் அமெரிக்க பல்கலைக்கழகங்களே முதலிடத்தைப் பெற்றுள்ளதாகவும் மேலும் தெரிய வருகின்றது.

அந்த வகையில் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் எமது பல்கலைக்கழககங்களின் மறுசீரமைப்பு தொடர்பில் கடந்த ஜூன் மாதம் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் வைத்து தெரிவித்திருந்த கருத்துகளுக்கு செயல்வடிவம் கொடுப்பதற்கான விடயத்தில் கௌரவ உயர் கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல அவர்கள் துணை நிற்பார் என்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது. இந்த முயற்சிக்கு அனைவரும் ஒத்தழைப்புகளை வழங்குவதற்கு முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை இங்கு முன்வைக்க விரும்புகின்றேன்.

இலங்கையில் கல்வி கற்போரில் சுமார் 0.82 வீதமானவர்களே பல்கலைக்கழக அனுமதியினைப் பெறுவதாகத் தெரிய வருகின்றது. இவர்களில் மருத்துவ மற்றும் பொறியியல்த்துறைகள் சார்ந்து 0.12 வீதமானோரே அனுமதி பெறுகின்றனர் எனவும் கூறப்படுகின்றது. பல்கலைக்கழகத்திற்குச் செல்வதற்கான உயர்தரப் பரீட்சையில் 41 வீதமானவர்கள் சித்தியடைகின்ற போதிலும், போட்டிப் பரீட்டசை மூலமாக அதிலிருந்து சுமார் 4.7 வீதமானவர்களே அனுமதி பெறுகின்றனர். அதாவது, 100 மாணவர்கள் உயர்தரத்தில் கல்வி கற்கின்ற நிலையில், அதிலிருந்து 1 அல்லது 2 மாணவர்களை மாத்திரம் பல்கலைக்கழகத்திற்கு அனுமதிக்கின்ற முறைமையே எமது நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலைமையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படுவது அவசியமாகும்.

பல்கலைக்கழகம் செல்லக்கூடிய தகுதிகளைப் பெற்றும், அவர்களில் சொற்ப வீதத்தினரே பல்கலைக்கழகம் செல்கின்ற வாய்ப்புகளைப் பெறுகின்ற நிலைமையானது, பல்கலைக்கழக கல்வி மறுக்கப்படுகின்ற பெருந்தொகையானவர்களை, அவர்கள் கற்ற கல்வி முறைமைக்கும் சமூக உழைப்பிற்கும் இடையிலான தொடர்புகளற்ற வெற்று நபர்களாக சமூகத்தில் தள்ளிவிடுகின்ற நிலைமைகளையே இந்த நாட்டில் தொடர்ந்து உருவாக்கி வருகின்றது.

எனவே உலக நாடுகளின் உதாரணங்களை எடுத்துக் கொண்டே நாமும் உயர் கல்வி தொடர்பிலான மாற்றங்களைக் கொண்டுவர வேண்டியுள்ளது. அத்தகையதொரு மாற்றத்தினை கொண்டு வராத பட்சத்தில், பல்லாயிரக் கணக்கான இளைஞர்களுக்கு துரோகம் இழைக்கின்ற பாவத்திலிருந்து எமது கல்விக் கட்டமைப்புகளை காப்பாற்ற இயலாமலேயே போய்விடும் என்பதை இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

Untitled-6 copy

Related posts:

வடக்கு கிழக்கில் தொல்பொருள் திணைக்களத்தால் ஏற்படுத்தப்படும் பிரச்சினைக்கு தீர்வு கிடைப்பது எப்போது? ...
அமைச்சர் டக்ளஸ் கோரிக்கை - அவுஸ்திரேலியா வழங்கியது கடல் கண்காணிப்பு தொகுதி - ஜனாதிபதி தெரிவிப்பு!
புதுமுறிப்பு நன்னீர் மின்குஞ்சு இனப் பெருக்கம் செய்யும் தொட்டிகளின் புனரமைப்பு பணிகளுக்கான முன்னேற்ப...

91 களில் எந்த கனவோடு இந்த மண்ணில் கால் பாதித்தேனோ அதே எண்ணங்களோடுதான் இன்றும் உங்களிடம் வந்துள்ளேன் ...
வடக்கு கிழக்கு கைத்தொழில் துறைக்கு இன்னொரு வாய்ப்பு - அமைச்சர் டக்ளஸின் கைகளில் தலைமை பொறுப்பு!
சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க யாழ்ப்பாணத்தில் அதி நவீன வசதிகளுடன் கூடிய உல்லாச படகுச் சேவை அமைச்சர் டக...