தோழமைத் தலைவருக்கு EPDP இணையத்தளத்தின் அகவை நாள் வாழ்த்துக்கள்!
Sunday, November 10th, 2024
தோழமைத் தலைவருக்கு
அகவை அறுபத்தி ஏழு!
தன் பிறந்த நாளையே
கொண்டாட விரும்பாத
எங்கள் தோழமைத் தலைவர்
செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு
இன்று அகவை அறுபத்தி ஏழு.
தமிழ் பேசும் மக்களுக்காக
இள வயதில் உரிமை கேட்டு எழுந்தவர்…
ஒரு சுதந்திரப்போராட்ட இயக்கத்தையே
வழி நடத்தி சென்றவர்,..
ஒட்டு மொத்த உரிமை போராட்ட வரலாற்றில
ஐம்பத்து மூன்று ஆண்டுகால வரலாற்றை கொண்டவர்,..
தேசிய நல்லிணக்க அரசியலில்
முப்பது ஆண்டு கால வரலாற்றை கொண்டவர்,..
இலங்கை அரசியல் வரலாற்றில்
தமிழ் தலைவர்களில்
எந்த தேர்தலிலும் தோற்காத
ஒரேயொருவர்,…
தமிழ் அரசியல் தலைவர்களில்
தொடர்ச்சியாக
ஏழு தடவை தேர்தலில் வென்ற
வரலாற்றை கொண்ட ஒரெயொருவர்,…
ஈழத்து அரசியல் தளத்தில்
அதி உச்ச அச்சுறுத்தல்களை
கடந்து வந்தவர்,…
தனித்துவமான யாதார்த்த வழிமுறையில்
தீர்க்கதரிசனமாக சிந்தித்து பயணிக்க
தொடங்கியதால்
திட்டமிட்டு உருவாக்கப்பட
அவதூறுகளை கடந்து வந்தவர்,…
சொல்லும் செயலும் ஒன்றானவர்,..
பாமர மக்களை அதிகம் நேசிப்பவர்,..
எளிமை நிறைந்தவர்,…
உண்மையை மட்டும் எழுதுங்கள்,
அதையே திரும்ப
மக்களிடம் சொல்லுங்கள்
என எமக்கு
கட்டாய கட்டளை
பிறப்பித்தவர்,..
உண்மையே வெல்லும்
அறம் சார்ந்த அவ்வழிக்கு
ஆணை விரைவில் கிடைக்கும்
என்ற அசையாத நம்பிக்கை
கொண்டவர்,..
தோழரின் கனவுகள் நிஜமாக
அவரது அகவை நாளில்
அவரை வாழ்த்துகிறோம்
-தோழமையுடன் EPDP இணையத் தளம்-
Related posts:
|
|
|


