தேர்தல்கால தவறு இன்று வலிக்கின்றது – மாவைகலட்டி மக்கள் பெருங்கவலை!

Sunday, May 24th, 2026

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மாற்றம் என்ற கோசங்களுடன் வந்த தரப்பினர் அவிழ்த்துவிட்ட பொய்களை எமது மக்கள் நம்பியதால் கிடைத்து வந்த சேவைகளை மட்டுமல்லாது மக்களை நேசித்த சேவையாளரையும் நாம் இழந்துவிட்டோம் என மாவை கலட்டி மக்கள் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

மாவைகலட்டி மக்களின் தேவைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து ஆராயும் வட்டார கூட்டம் இன்று (24) செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் பிரசன்னத்துடன் நடைபெற்றது.

இதன்போது கூட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் தமது கருத்துக்களை முன்வைத்து, தவறுகளை சுட்டிக்காட்டி ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.
மேலும் மீள் குடியேற்றப்பட்ட காலத்தில் எமது மாவைகலட்டி பகுதியை எம்மிடம் மீண்டும் அளிக்கப்படுவதில் பல தடைகள் இருந்தன.

ஆனாலும் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது தற்துணிவுடன் நடவடிக்கைகளை முன்னெடுத்து எமது பிரதேசத்தை எம்மிடம் மீட்டுத் தந்திருந்தார்.

அதுமட்டுமல்லாது இந்த பகுதி பற்றைகளாலும் குண்டும் குழியுமான வீதிகளையும் கொண்டு நாளாந்த தேவைகளைக்கூட நிவர்த்தி செய்வதில் மக்கள் பல இடர்பாடுகளை எதிர்நோக்கி வந்தனர்.

ஆனால் அன்றைய அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா தன் முயற்சியால் தற்துணிவால் மீள் குடியேற்றத்துடன் வீதிகள் ஒவ்வொன்றும் காப்பெற் ஆக்கப்பட்டன.

கல்விக்காக போராடிக்கொண்டிருந்த எம்பகுதி மாணவர்களுக்குரிய அனைத்து வசதி வாய்ப்புகளும் கிடைக்கப்பெற்று பல மாணவர்கள் பல்கலை கழகம் வரை செல்லும் வாய்ப்பை உருவாக்கித்தந்துள்ளார்.

மின்சாரம், தொழில்வாய்பு, கட்டுமாணங்கள் என அத்தனையையும் செயல்வடிவில் காட்டியிருந்தார்.

ஆனாலும் நடந்து முடிந்த தேர்தலில் மக்கள் பொய்களுக்கும் புளுகுகளுக்கும் எடுபட்டு இருந்ததையும் இல்லாது செய்துவிட்டனர்.

இதன் விளைவை மக்கள் அனுபவித்தும் வருகின்றனர்.

அதனால்தான் இன்று நாம் செய்த தவறுகளின் வலிகளை கூறி ஆதங்கம் கொள்கின்றோம் என்று கூறியதுடன் இனியொரு தடவை இவ்வாறான ஏமாற்றுக்காரர்களின் வலைக்குள் எமது பகுதி மக்கள் வீழ மாட்டார்கள் என்றும் உறுதிபடக் கூறியிருந்தனர்.

இன்நிலையில் ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த காலத்திலிருந்து முள்ளிவாய்க்கால் வரையான காலப் பகுதிவரை பலியான அனைவரையும் நினைவுகூர்ந்து இரு நிமிட மௌன அஞ்சலியுடன் கூட்டத்தை ஆரம்பித்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, மாற்றுக் கொள்கையுடன் மாற்று வேலைத் திட்டத்துடன் சேவையை முன்னெடுத்த எமது வழிமுறையே யதார்த்தமானது என்பதை அனைத்து தரப்பினதும் ஏற்றுக்கொண்டது மட்டுமல்லாது நாம் காட்டிய அந்தப் புள்ளிக்கே வந்தும் உள்ளனர் என்று தெரிவித்ததுடன் சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பாகவும் மக்களுக்கு தெளிவுபடுத்தினார்.

Related posts: