தேசிய ரீதியில் சாதனை படைத்த மாணவர்கள் கௌரவிப்பு!

Thursday, February 6th, 2025

வட்டு இந்துக் கல்லூரியிலிருந்து தேசிய ரீதியில் Little  Agriculturist Program ல்  (இளம் விவசாய விஞ்ஞானி) gold medal வென்ற மாணவகளைக்  கெளரவிக்கும் நிகழ்வு வட்டு இந்துவின் முதல்வர் திரு .லங்கா பிரதீபன் தலைமையில் கல்லூரியின் சோமசுந்தரப் புலவர் அரங்கில் சிறப்பாக இடம்பெற்றது.

இதில் கல்லூரியின் பழைய மாணவரும் ரட்ணம் பவுண்டேஷன் ஸ்தாபகருமான கலாநிதி ரட்ணம் நித்தியானந்தன் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். அத்துடன் விவசாய போதனாசிரியர்  ரமேஷ், ஆசிரிய ஆலோசகர் திரு அருந்தவம், வடமராட்சி களக்கற்கை நிலைய முகாமையாளர் கோகுலராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து தேசிய ரீதியில் சாதனை படைத்த மாணவரை வாழ்த்தியும் இருந்தனர்.

குறித்த பாடசாலை மாணவர் ஐவரிற்குமான தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு  அண்மையில் கொழும்பு பல்கலைக்கழக வளாகத்தில் நிகழ்ந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Related posts: