எச்.ஐ.வி நோய் தொற்றாளர்களின் எண்ணிக்கை இலங்கையில் அதிகரிப்பு

Wednesday, May 11th, 2016

இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் எச்.ஐ.வி நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட 68 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய பாலியல் மற்றும் எய்ட்ஸ் தடுப்பு பிரிவின் சிறப்பு நிபுணர் வைத்தியர் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

1986ஆம் ஆண்டு இலங்கையில் எய்ட்ஸினால் பாதிக்கப்பட் முதலாவது நபர் அடையாளம் காணப்பட்ட அதேவேளை, இது வரையிலும் 2377 பேருக்கு எச்.ஐ.வி நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனினும், இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் எச்.ஐ.வி நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட 68 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நோய் தொடர்பிலான பரிசோதனைகளை மேற்கொள்ளவதற்கான வசதி தற்போது அதிகமாக இருக்கின்றது. இதனால், நோயாளர்களை இலகுவில் அடையாளம் காணமுடிகின்றது.

இதேவேளை, ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் எச்.ஐ.வி நோய் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: