துருக்கிக்கு ஒரு மாத காலக்கெடு – உறவுகளைத் துண்டிக்கப்போவதாக உகாண்டா இராணுவ தளபதி எச்சரிக்கை!

Saturday, April 11th, 2026

உகாண்டாவுக்கும் துருக்கிக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது. உகாண்டாவின் ராணுவ தளபதி முஹூசி கைனருகபா துருக்கி நாட்டுடனான அனைத்து உறவுகளையும் துண்டிக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 “சர்வதேச விவகாரங்களில் உண்மையான சிக்கலே துருக்கிதான்” என்று சாடியுள்ள முஹூசி, அந்நாடு தனது நிலைப்பாடுகளைச் சீரமைத்துக் கொள்ளும் என நீண்டகாலமாகப் பொறுமை காத்ததாகத் தெரிவித்துள்ளார்.

நிலுவையில் உள்ள சிக்கல்கள் மற்றும் உகாண்டாவின் கோரிக்கைகளுக்கு அடுத்த 30 நாட்களுக்குள் துருக்கி உரிய தீர்வை வழங்க வேண்டும் என அவர் நிபந்தனை விதித்துள்ளார்.

இந்த காலக்கெடுவிற்குள் தீர்வு எட்டப்படாவிட்டால், துருக்கியுடனான அனைத்து தூதரக மற்றும் பாதுகாப்பு உறவுகளும் முற்றிலுமாகத் துண்டிக்கப்படும் என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

உகாண்டா அதிபர் யோவேரி முசெவேனியின் மகனான முஹூசி கைனருகபாவின் இந்த அறிவிப்பு, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையிலான அரசியல் சூழலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts: