திருத்தப்பட்ட கட்டணங்களைப் பொதுமக்களுக்குக் காண்பிப்பது கட்டாயம்!

Sunday, March 29th, 2026


…………
பேருந்துகளில் திருத்தப்பட்ட கட்டணங்களைப் பொதுமக்களுக்குக் காண்பிப்பது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த விடயத்தை மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அனுமதிப்பத்திர நிபந்தனைகளின் கீழ் இது கண்டிப்பாகச் செய்யப்பட வேண்டும் என்று அந்த அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு கட்டணப் பட்டியலைக் காட்சிப்படுத்தாத பேருந்துகளின் அனுமதிப்பத்திரங்கள் ரத்து செய்யப்படும் அல்லது அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
090

Related posts:

போக்குவரத்துக்கு இடையூறாகத் திரியும் கட்டாக்காலிகள் பிடிபட்டால் இனி ஏலத்தில் விற்கப்படும்! பிரதேச ச...
வாகன இறக்குமதிக்காக சுமார் 450 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடன் கடிதங்கள் ஏற்கனவே திறக்கப்பட...
யாழ்ப்பாண பொது நூல் நிலையம் புதுப்பொலிவுடன் இன்று தலை நிமிர்ந்து நிற்கிறது அறிவுப்பொக்கிஷம்!