திங்களன்று கூடும் தேர்தல்கள் ஆணைக் குழு!
Saturday, April 19th, 2025
தேர்தல்கள் ஆணைக்குழு நாளை மறுதினம் திங்கட்கிழமை (21
.04.2025) கூடவுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மன்னார் பிரதேசத்தில் வெளியிட்ட கருத்தொன்று தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக ஆணைக்குழு கூடவுள்ளது.
ஜனாதிபதி கடந்த நாளொன்றில் மன்னார் பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு, தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு விசேடமாக நிதி ஒதுக்கீடு செய்வது குறித்து வெளியிட்ட கருத்து தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, இந்தப் முறைப்பாடுகளை விசாரிப்பதற்காக ஆணைக்குழு நாளைமறுதினம் கூடவுள்ளது.
000
Related posts:
மகிந்த ராஜபக்சவுக்கு போதியளவு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.
பிரதமருக்கு தேர்தல்கள் ஆணைக்குழு கடிதம்!
யாழ் நகர் கழிவுகளை உழவு இயந்திரத்தில் எடுத்துச் செல்லும்போது மக்களுக்கு பாரிய அசௌகரிகம் - யாழ் மாநகர...
|
|
|


