தலைமுடி வெட்டும் ரோபோ இயந்திரம் அறிமுகம்!…

Sunday, November 9th, 2025


அழகாக முடிவெட்டிக் கொள்வது சவாலான வேலையாக மாறிவருகின்ற நிலையில் நோர்வேயில் விதம் விதமாக தலைமுடி வெட்டும் ரோபோ இயந்திரம் அறிமுகமாகியுள்ளது.

ஆம்… அப்படியொரு எந்திரத்தில் வாலிபர்கள் சிலர் முடிவெட்டி சிகை அலங்காரம் செய்து கொள்ளும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஆட்டோ ஸ்ட்ரீட் பார்பர்’ என குறிப்பிடப்படும் அந்த எந்திரம், ராட்சத ஸ்பீக்கர் போன்ற தோற்றத்தில் இருக்கிறது.

அதில் விரும்பிய ஸ்டைல் குறித்த கட்டளைகளை கூறி வாஷிங்மெஷின் கதவு போன்ற ஒரு திறப்புக்குள் நமது தலையை நுழைத்தால் போதும், சில வினாடிகளில் சிகை அலங்காரத்தை முடித்து விடுகிறது ரோபோ
இந்த எந்திரங்கள் நோர்வே நாட்டின் ஓஸ்லோ நகரில் பயன்பாட்டுக்கு வந்திருப்பதாக அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

000

Related posts: