விரைவில் வவுனியா மாவட்டத்தில் பி.சிஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் – ஈ.பி.டி.பி.யின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் தெரிவிப்பு!

Monday, June 21st, 2021

சில தினங்களுக்குள் வவுனியா மாவட்டத்திற்கு பி.சி.ஆர் இயந்திரம் ஒன்றை வழங்குவதற்கு சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி இணக்கம் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்திற்கு பி.சி.ஆர். இயந்திரத்தின் அவசியம் தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் மாவட்ட ஒருங்கிணைப்பு இணைத் தலைவர்களுக்குமான கலந்துரையாடலில், வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் குலசிங்கம் திலீபன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தார்.

இந்நிலையில் இன்றையதினம் நாடாளுமன்றில் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியராச்ச்சியை சந்தித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான குலசிங்கம் திலீபன் ஆகியோர் வவுனியா மாவட்டத்திற்கான PCR இயந்திரத்தின் அவசர தேவை தொடர்பில் எடுத்துரைத்திருந்தனர்.

குறித்த சந்திப்பை அடுத்து துறைசார் அதிகாரிகளுடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி விரைவில் பிசிஆர் இயந்திரமொன்றை வவுனியாவிற்கு வழங்கும்படி பணிப்புரை விடுத்திருந்தார்.

அத்துடன் ஜுலை முதல் வாரத்திற்குள் PCR இயந்திரத்தை வழங்குவதாக  உறுதியளித்திருந்த சுகாதார அமைச்சர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையை ஏற்று துறைசார்  அதிகாரிகளை வவுனியாவிற்கு அனுப்பி வவுனியா வைத்தியசாலை ஆய்வுகூடத்தினை பார்வையிட்டு குறித்த சோதனையை மேற்கொள்வதற்கான ஏதுநிலைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்பதாக  வவுனியா மாவட்டத்துக்கான பி.சி.ஆர் இயந்திரத்தை வடக்கின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து கொள்வனவுசெய்து கொடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோருவதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்த நிலையில் அதற்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் சம்மதம் வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில் தமிழ் மக்களின் நலன்களை நிறைவு செய்து கொடுக்கும் இந்த முயற்சிக்கு தான் முழுமையான ஆதரவை தருவதாக தெரிவித்திருந்ததுடன் குறித்த பிசிஆர் இயந்திரத்தை பெற்றுக்கொள்ள ஜனாதிபதி மற்றும் சகாதார அமைச்சர் ஆகியோருடன் பேச்சுக்களை நடத்தி அதற்கு அவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே குறித்த இயந்தரத்தை வழங்கவதற்கு சுகாதார அமைச்சர் இன்றையதினம் பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: