தமிழ் மக்கள் டக்ளஸ் தேவானந்தாவை மிகவும் நேசிப்பவர்களா இருக்க வேண்டும் – ஈ.பி.டி.பியின் தீவக வேட்பாளர் புவி தெரிவிப்பு!

Friday, November 1st, 2024

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா முன்னெடுக்கும் முயற்சிகள் மற்றும் சேவைகள் அனைத்தும் தமிழ் மக்களுக்கும் நாட்டுக்கும் நன்மை பயர்ப்பனவாகவே இருந்து வந்துள்ளன என்று சுட்டிக்காட்டியுள்ள கட்சியின் தீவக தொகுதி நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர் கிருஸ்னன் புவி ஆயுதப் போராட்ட காலங்களிலும் சரி ஜனநாயக வழிமுறையினூடாகவும் சரி தமிழ் மக்களின் தேவைகளை இனங்கண்டு அவற்றுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற கொள்கையுடனேயே தொடர்ந்தும் ஓயாது இயங்கிக்கொண்டிருக்கின்றார் என்றும் தெரிவித்துள்ளார்.

ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலையைில் தீவக தொகுதியின் அனலைதீவு, எழுவைதீவு, நயினாதீவு ஆகிய பகுதிகளில் இன்றையதினம் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

குறித்த பகுதிகளில் மக்களுடனான தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இதன்போது செயலாளர் நாயகத்தினால் கடந்த காலங்களில் தீவக பகுதி மக்களுக்கும் பிரதேசத்திற்கும் பெற்றுக்கொடுக்கப்பட்ட சேவைகளை செயற்பாடுகள் தொடர்பில் நினைவு கூர்ந்திருந்துகாட்டிய அவர் மேலும் கூறுகையில் –

இன்றுள்ள அரசியல்வாதிகளுள் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வேறுபட்டவராகவே இருந்துவருகின்றார். அவர் சொல்வதையே செய்வார் செய்வதையே சொல்வார்.

அவர் மக்களுக்கான தேவைப்பாடை அறிந்து அவர்களது நலன்கள் அவர்களது எதிர்காலம் அவர்களது பொருளாதாரம் என்பன எவ்வாறானதாக இருக்க வேண்டும் அல்லது கிடைக்கின்ற சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவற்றை எவ்வாறு மக்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதில் அதிக கரிசனையாக செயற்பட்டு அதில் வெற்றியும் கண்டுள்ளார். இதன் பலன்களை இந்த தீவக மக்கள் மறக்க மாட்டார்கள்.

அதனால்தான் கூறுகின்றேன் தமிழ் மக்கள் இவ்வாறான ஒரு தலைவரை மிகவும் நேசிப்பவர்களா இருக்க வேண்டும் என்றும் அரசியலில் மாற்றத்தை உருவாக்க நினைக்கும் நீங்கள் உங்களின் அந்த மாற்றத்தினூடாக வழங்கவுள்ள அரசியல் அதிகாரத்தை அவரிடமே கொடுக்க வேண்டும் என்றும்.

மேலும் தமிழ் மக்களின் தேவைகளை பெற்றுக்கொடுப்பதற்காக அவர் முன்னெடுத்த பல்வேறு முயற்சிகளில் பல்வேறு தடைகள் இருந்தபோதிலும் அதன் உச்சிவரை சென்ற அவற்றை தனது தேசிய நல்லிணக்கம் என்ற பொறிமுறையால் உடைத்து வெற்றிபெற்றுக் கொடுத்திருக்கின்றார்.

அதேபோன்று எமது மக்கள் எதிர்கொள்ளும் அனைத்துவகையான பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் ஒரு தகுதியானவராக காணப்படுகின்றார். ஆனால் அவரிடம் இதுவரை தமிழ் மக்கள் அதிகளாவான அரசியல் பலத்தை கொடுத்திருக்கவில்லை.

எனவே இம்முறை தமிழ் மக்கள் ஒன்றிணைந்து தமது எதிர்கால நலன்களை மையப்படுத்தி நடைமுறை  யதார்த்தத்தினை புரிந்து அவரது கட்சியான ஈ.பி.டி.பியை வலுப்படுத்த வீணைச் சின்னத்துக்கு வாக்களிப்பது அவசியமாகும் என அழைப்பு விடுத்த அவர் மக்களது  அணிதிரள்வு ஈ.பி.டி.பியை நோக்கியதாக அமைந்தால் தமிழ் மக்களது அனைத்து தேவைகளுக்குமான தீர்வுகளும் சிறப்பானதாக அமையும் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

2021 ஆம் ஆண்டுமுதல் ஐரோப்பிய ஒன்றிய GSP + இன் அதே நன்மைகளை இலங்கை பெறும் - பிரித்தானியாவின் சர்வதேச ...
ஏப்ரல் 21 பயங்கரவாத குண்டு தாக்குத விவகாரம் - பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் மற்றும் முன்ன...
சட்டவிரோத மணல் கடத்தல் காரர்களினால் வடமராட்சி பகுதிகளில் விபத்துக்கள் அதிகரிப்பு – கட்டுப்படுத்துமாற...

பல்கலைக்கழகங்களை ஜனவரியில் முழுமையாக மீள திறக்க தீர்மானம் - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவிப...
மானிட சமூகத்துக்கிடையிலான உறவுகளை பலப்படுத்துகின்ற திருநாள் இன்று - வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி!
நாளை நண்பகலுக்கு முன் விண்ணப்பங்களை கையளிக்கவும் - குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்ட...