தபால் மூல வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி வியாழன் நள்ளிரவு வரை நீடிப்பு!
Wednesday, October 9th, 2024
நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 08 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணியுடன் முடிவடையவிருந்த ஏற்றுக்கொள்ளும் திகதி 2024 ஒக்டோபர் 10 ஆம் திகதி வியாழன் நள்ளிரவு 12.00 மணி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தபால்களில் ஏற்படக்கூடிய தாமதங்கள் மற்றும் ஆணைக்குழுவிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைகளை கருத்திற் கொண்டு இந்த தீர்மான எடுக்கப்பட்டுள்ளது
மேலும் 2024 அக்டோபர் 10ஆம் தேதி நள்ளிரவு 12:00 மணிக்கு முன்னதாக அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்
000
Related posts:
கொரோனா கட்டுப்படுத்தலுக்கு யாழ் மக்களின் ஒத்துழைப்பு போதாதுள்ளது - யாழ்.மாவட்ட இராணுவக் கட்டளைத் தளப...
அரசியலமைப்பின் மூலம் பிரஜை ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளின் வரம்புகளை அறிந்து சட்ட ரீதியாகவும் ...
ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட நிர்வாண புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டுள்ளன - பொது பாதுகாப்ப...
|
|
|


