சேவைக்கான கட்டணம் அதிகரிப்புக் கோரி யாழில்PickMe சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் போராட்டம்!

Sunday, March 22nd, 2026


……
எரொருளின் விலை அதிகரித்தும் தமது சேவைக்கான கட்டணம் அதிகரிக்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து PickMe போக்குவரத்து சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

யாழ் மணிக்கூட்டு கோபுரத்துக்கு அருகில் குறித்த போராட்டம் இன்று (22) முற்பகல் இடம்பெற்றது.

போராட்டத்தின்போது அவர்கள் கூறுகையில் –

கடந்த காலங்களில் தாம் குறித்த  நிறுவனத்தின் ஒருங்கிணைப்பில் இணைந்து தமது சேவையை முன்னெடுத்து வந்த நிலையில் அச்சேவையில் இணைவதற்காக இரு தொகை நிதியை வழங்கி வந்திருந்தோம்

தற்போது எரிபொருளின் விலை சடுதியாக உயர்ந்துள்ளது. ஆனால் குறித்த நிறுவனம் முச்சக்கர வண்டிகள் சேவைக்காக தமது நிறுவனம் அறவிடும் தொகையை அதிகரித்துள்ளது.

ஆனால் சேவையை முன்னெடுக்கும் எமக்கு எந்தவிதமான கட்டண அதிகரிப்பையும் முன்னெடுக்கவில்லை.

நாம் எமது முதலீட்டில் இச்சேவையை முன்னெடுத்து வரும் நிலையில் இச்செயற்பாடு எமக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.

நியாயம் கேட்டால் அசண்டையீனமான பதில் கூறுகின்றார்கள். எனவே எம்மால் குறித்த சேசையை அதே கட்டணத்தில் முன்னெடுக்க முடியாது.
எமக்கு நீதி வேண்டும் என்றும் கோரியே போராடுகின்றோம் என்றனர்.

Related posts: