சேகர் தோழரின் சிறிய தந்தையின் பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை !

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சிரேஷ்ட தோழர் சேகர் (ஸ்ரீதரன்) அவர்களின் சிறிய தந்தையார் வேலுபிள்ளை இராசரத்தினத்தின் (ராசாத்தி) பூதவுடலுக்கு கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்மாலை அணிவித்து தனது இறுதி அஞ்சலி மரியாதையை செலுத்தினார்.
வயது மூப்பின் காரணமாக நேற்றையதினம் (27) அமரர் வேலுபிள்ளை இராசரத்தினம் (ராசாத்தி) தனது 70 ஆவது வயதில் காலமானார்.
இன்நிலையில் சுழிபுரம் பெரியபுலவில் உள்ள அன்னாரது இல்லத்தில் பூதவுடல் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு சென்றிருந்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, அமரரின் பூதவுடலுக்கு தனது இறுதி அஞ்சலியை செலுத்தியதுடன் அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு தனது ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்திருந்தார்.
இதன்போது கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன், கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரும் வடக்கு மாகாணசபையின் முன்னாள் எதிர்க் கட்சித் தலைவருமான கந்தசாமி கமலேந்திரன், கட்சியின் யாழ் மாவட்ட தலைமை அலுவலக நிர்வாக பொறுப்பாளர் வசந்தன் ஆகியோருடன் கட்சியின் வலிகாமம் மேற்கு பிரதேச நிர்வாக செயலாளர் செல்வக்குமார் உள்ளிட்ட பலரும் அன்னருக்கு தமது அஞ்சலி மரியாதையை செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|