சீனா – இலங்கை இருதரப்பு உறவுகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!
Wednesday, October 23rd, 2024
சீனத் தூதரகத்தின் பிரதிப் பிரதானி சூ யன்வெய் (Zhu Yanwei), ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்துள்ளார்.
இதன்போது சீனா-இலங்கை இருதரப்பு உறவுகளை பல்வேறு துறைகளில் மேலும் விரிவுபடுத்துவது குறித்து இந்த சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டிருந்தது.
அத்துடன், சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் பரஸ்பர மரியாதை என்பன குறித்து இதன் போது நினைவுகூரப்பட்டதுடன், இரு நாடுகளுக்குமிடையிலான சமூக, கலாச்சார மற்றும் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகள் குறித்தும் ஆராயப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ கைது!
சீனி அதிகமாக உள்ள பானங்களால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் – எச்சரிக்கும் ஆய்வாளர்கள்!
பசறை விபத்து தொடர்பில் பொலிஸ் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையும் பொறுப்பு கூறவேண்டும் - பேருந்து...
|
|
|


