சீனாவின் சகோதர பாசம்” யாழ்ப்பாணத்தில்!

Monday, February 10th, 2025

சீனாவின் சகோதர பாசம் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் யாழ் மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நிவாரணப் பொருட்கள் இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் பிரதிப் பிரதானி சூ யன்வெய் (Zhu Yanwei) அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.

யாழ் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில்  இன்று 10.02.2024 நடைபெற்ற குறித்த நிகழ்வில் மாவட்ட செயலாளர்  பிரதீபன் மற்றும் சீன தூதரகத்தின் உயரதிகாரிகள் பிரதேச செயலகர்கள் துறைசார் அதிகாரிகள் என கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வின்போது கடந்த வருட இறுதியில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட 1070 குடும்பங்களுக்கு தலா  6490 ரூபா பெறுமதியான பொதிகள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


வெப்பநிலை அதிகமாக காணப்படும் பாடசாலைகளின் நேர அட்டவணையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தப்படாது - கல்...
நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் தலைமையில் நடைபெற்றது வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுகூட்டம் - மக்கள்...
கடற்றொழிலாளர் வாழ்வு மேம்பட வருமானங்களை முதலீடாக்கும் பொறிமுறை அவசியம் - கிளிநொச்சி மாவட்ட ஒருங்கி...