சிறுவர்களை இலக்கு நோக்கி பயணிக்க வைப்பது ஆசிரியர்களின் கடமை – உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் வலியுறுத்து!

Wednesday, October 8th, 2025


……
சிறுவர்களை இலக்கு நோக்கி பயணிக்க வைப்பது ஆசிரியர்களின் தார்மீக கடமை என உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் தெரிவித்துள்ளார் .

பண்டத்தரிப்பு இந்துக்கல்லூரியில் சிறுவர் தினத்தையொட்டி விளையாட்டு உபகரணங்கள் மற்றும் கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு நேற்றையதினம் அதிபர் தலைமையில் நடைபெற்றபோது உரையாற்றியபோதே இதனை தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்றைய சிறுவர்கள் ஏனோதானோ என்று வாழ்கின்றார்கள். எதிலும் அக்கறை அற்றவர்களாகவும் பொறுப்பற்றவர்களாகவும் செயல்படுகின்றனர்.

ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமான இடைவெளி அதிகரிக்கின்றது ஆனாலும் ஆசிரியர்கள் வலிந்திழுத்து சில செயல்பாடுகளை செய்கின்றனர்.

அது இலக்கினை அடைவதற்கு உதவமாட்டாது. இலக்கு என்பது ஒன்றாக இருக்க வேண்டும் வகுப்புக்கு வகுப்பு மாறவும்கூடாது மாற்றவும் கூடாது.

வாழ்க்கையில் நம்பிக்கை இல்லாது வாழ்கின்றனர். ஏனைய உயிரினங்கள் வாழக்கற்பதில்லை ஆனால் மனிதன் மட்டும் கற்பதை பின்பற்றுவதில்லை மீன் நீந்தகற்பதில்லை மான் ஒடகற்பதில்லை, புலி பாயக் கற்பதில்லை மயில் ஆடக்கற்பதில்லை ஆனால் மனிதன் மட்டும் வாழக்கற்றும் வாழமுடியாது திண்டாடுகிறான்.

எனவே பிள்ளைகளே என்னடா வாழ்க்கை என்று ஏங்காது இது என்னுடைய வாழ்க்கை என இரசித்து ருசித்து வாழப்பழகுங்கள் எனத்தெரிவித்தார்.
000

Related posts: