சட்டம் திருத்தப்படும் வரை மாகாண சபைத் தேர்தல்களை நடத்தும் எந்த அதிகாரமும் தேர்தல் ஆணைக்குழுவிற்கு இல்லை !

Sunday, October 19th, 2025


…..
மாகாண சபைச் சட்டம் நாடாளுமன்றத்தால் திருத்தப்படும் வரை மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணைக்குழுவிற்கு எந்த அதிகாரமும் இல்லை என அதன் தலைவர் ஆனந்த ரத்நாயக்க  தெரிவித்துள்ளார்.  

தேர்தல் ஆணைக்குழுவிற்கு அதிகாரங்கள் கிடைத்த பிறகு, மாகாண சபைத் தேர்தல்கள் மாகாண மட்டத்தில் தனித்தனியாக நடத்தப்படுமா அல்லது ஒன்றாக நடத்தப்படுமா என்பதை அது முடிவு செய்யும் என்றும் தெரிவித்துள்ளார்.  

மாகாண சபைத் தேர்தல்கள் பழைய முறையில் நடத்தப்பட வேண்டுமானால், சட்டத்தில் சேர்க்கப்பட்ட திருத்தத்தை நீக்க வேண்டும். 

அடுத்த ஆண்டு  மாகாண சபைத் தேர்தலுக்காக ஐந்து அல்லது ஆறு பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேபோல், இந்த ஆண்டும் தேர்தல்களுக்கு பணம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த ஆண்டு அவை நடத்தப்படாவிட்டால், அந்தப் பணம் கருவூலத்திற்குத் திருப்பி அனுப்பப்படும் என தெரிவித்தார்

Related posts:


இன்று கைது செய்யப்படுபவர்களுக்கு பொலிஸ் பிணை வழங்கப்படமாட்டாது - சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித...
பெண்களுக்கெதிரான வன்முறைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு - 1938 ஐ அழைப்பவர் எண்ணிக்கையும் நாளாந்தம் அதிகரி...
எம்.பிக்கள், அமைச்சர்கள் அல்லாத நபர்களின் பாதுகாப்புக்காக 5400 பொலிஸ் அதிகாரிகள் - பொதுமக்கள் பாதுகா...