கூட்டாட்சிக்கு சென்றுள்ள தமிழ் தேசியவாதிகள் டக்ளஸ் தேவானந்தாவிடம் சென்று கொள்கை சமஸ்டி தொடர்பில் கற்றுக் கொள்ளுங்கள் – ஜனநாயக தமிழரசுக் கட்சியின் உபதலைவி விமலேஸ்வரி அறிவுரை!
Sunday, April 26th, 2026
தேசியம் என்ற போர்வையில் கொள்கைகளற்று திரிந்து இறுதியாக இன்று கூட்டாட்சிக்கு சென்றுள்ள தமிழ் தேசியவாதிகள் அனைவரும் கொள்கை மாறாது ஒரே நோக்குடன் பயணிககும்; டக்ளஸ் தேவானந்தாவிடம் சென்று சமஸ்டி என்றால் என்ன கூட்டாட்சி என்றால் என்ன என்பது தொடர்பில் கற்றுக் கொள்ளுங்கள். அவரே உங்களுக்கு தேசியம் மற்றும் கொள்கைகள் தொடர்பில் வகுப்பெடுக்க சரியானவராக உள்ளார் என ஜனநாயக தமிழரசுக் கட்சியின் உபதலைவி விமலேஸ்வரி தெரிவித்துள்ளார்.
இன்று தந்தை செல்வாவின் 49 ஆவது நினைவு நாள் இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா அரங்கில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் இம்முறை முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் சமஸ்டி தொடர்பில் உரையாற்றுவதற்காக அழைக்கப்பட்டிருந்தார்.
இது தொடர்பில் யாழ் ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பொன்றை முன்னெடுத்த ஜனநாயக தமிழரசுக் கட்சியின் உபதலைவி விமலேஸ்வரி இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –
அதிகளவில் தமிழ் தேசியம் பேசியவர்கள் எல்லாம் இன்று கூட்டாட்சிக்கு போய்விட்டார்கள். ஏன் இதைத்தானே எங்கள் டக்ளஸ் தேவானந்தா மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்று கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கூறிவந்திருக்கின்றார்.
அவர் அவ்வாறு கூறியபோதெல்லாம் நீங்கள் நக்கலடித்துக்கொண்டு திரிந்தீர்கள். ஆனால் இன்று அவர் கூறிய இடத்துக்கே அதுதான் சரி என்று சென்றுள்ளனர்.
இன்று கூட்டாட்சிக்கு சென்றுள்ள நீங்கள் ஒவ்வொருவரும் மத்தியில் கூட்டாட்சி எப்படி மாநிலத்தில் சுயாட்சி எப்படி என்று இன்று நீங்கள் மேற்கொள்ளும் சமஸ்டி சீர்திருத்தம் போன்று ஒரு நிகழ்வை வைத்து டக்ளஸ் தேவானந்தாவை அழைத்து விரிவுரையை எடுத்திருக்கலாம். ஏனெனில் அவர் 30 வருடமாக தனது கொள்கையில் மாறாது நிற்கும் ஒருவர். அவ்வாறான ஒருவரை கொண்டுவந்து நீங்கள் வகுப்பெடுங்கள்.
உங்களுக்கு வகுப்பெடுக்க அவரே சிறந்த தெரிவு. ஏனென்றால் நீங்கள் தேசியத்தை எந்தளவுக்கு சீரழிக்க முடியுமோ அந்தளவுக்கு கொள்கைகளற்று சீரழித்துவிட்டீர்கள். அதனால்தான கூறுகின்றேன் கொள்கை மாறாத அவரை கொண்டுவந்து வகுப்பெடுத்து கற்றுக்கொள்ளுங்கள் என்று என்றார்.
0000
Related posts:
|
|
|


