குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுமாயின் அவை தொடர்பாக நீதிக் கட்டமைப்புக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர அரசியல்வாதிகள் அல்ல – ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் !

Monday, April 21st, 2025


அரசியல் நலன்களுக்காக தேர்தல் மேடைகளிலும், ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களிலும் அரசியல் செயற்பாட்டாளர்களின் கைதுகள் தொடர்பாக பேசப்படுவதை சுட்டிக்காட்டிய செயலாளர் நாயகம்  டக்ளஸ் தேவானந்தா, யாருக்கு எதிராகவேனும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுமாயின் அவை தொடர்பாக நீதிமன்றங்களும் நீதிக் கட்டமைப்புக்களும் நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர அரசியல்வாதிகள் அல்ல எனவும் தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள
தேர்தல் ஆணைக்குழு தலமையகத்தில்  இன்று நடைபெற்ற கட்சி தலைவர்களுக்கு இடையிலான  சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துக்களை வெளியிட்ட செயலாளர் நாயகம் மேலும் தெரிவிக்கையில்,

உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் நாடெங்கிலும் ஓரே நாளில் நடத்தப்படாமல், சிலவற்றுக்கான தேர்தல் திகதி ஒத்திவைக்கப்படுமாயின், முதலில் நடைபெறுகின்ற பிரதேசங்களின் தேர்தல் முடிவுகள், பின்னர் நடத்தப்படும் தேர்தல் முடிவுகளில் தாக்கத்தினை செலுத்தும் எனத் தெரிவித்துடன், குறித்த விடயங்கள் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு கவனத்தில் எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். – 21.04.2025

Related posts:

நிலையற்ற அரசியல் கொள்கையே நிடிக்கிறது - நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்ட...
நிலையற்றதொரு ஆட்சியின் பிரதிபலிப்புகளை இந்த நாட்டு மக்கள் வீதிகளில் அனுபவிக்கின்றனர் – டக்ளஸ் எம்.பி...
உணவு பாதுகாப்பு மற்றும் உற்பத்தி நடவடிக்கைகளுக்கே முன்னுரிமை - மன்னாரில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!