கனடாவுடனான வர்த்தகப் பேச்சுக்கள் நிறுத்ம் – அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு!
Saturday, June 28th, 2025
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கனடாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை உடனடியாக நிறுத்துவதாக அறிவித்துள்ளார். தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது கனடா விதித்துள்ள கடுமையான வரியே இந்த முடிவுக்குக் காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அந்நிய ஊடகங்களின் செய்திகளின்படி, இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையைக் கடந்து செல்லும் பொருட்களுக்கான புதிய வரிகள் அடுத்த ஒரு வாரத்திற்குள் அறிவிக்கப்படும் என்றும் அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
கனடாவின் டிஜிட்டல் சேவைகள் வரி, கனடாவில் உள்ள இணையப் பயனர்களுடன் ஈடுபடும் கனடிய மற்றும் வெளிநாட்டு வணிகங்களுக்குப் பொருந்தும், இது திங்கட்கிழமை, ஜூன் 30, 2025 அன்று நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமேசான், கூகிள், மெட்டா, ஊபர் மற்றும் ஏர்பிஎன்பி உள்ளிட்ட நிறுவனங்களின் கனடியப் பயனர்களிடமிருந்து கிடைக்கும் வருவாயில் 3% கட்டணம் இந்த வரி மூலம் விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
000
Related posts:
|
|
|


