கட்டுநாயக்க விமான நிலையத்தில்  சாரதி அனுமதிப்பத்திர சேவை!…

Sunday, August 3rd, 2025


வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான சேவை கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வளாகத்தில் இன்று (ஆகஸ்ட் 3) முதல் தொடங்கப்படும் என்று மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க அறிவித்தார்.

இதுவரை, இந்த சேவை வேரஹெரவில் உள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் விமான நிலையத்திற்கு அருகிலேயே வாகனங்களை வாடகைக்கு எடுத்துக்கொண்டு தாங்களாகவே ஓட்டிச் செல்வதால், புதிய வசதி அவர்களுக்கு மேலும் வசதியை ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் இலகு ரக வாகனங்களை பயணத்திற்குப் பயன்படுத்துவதாக அமரசிங்க குறிப்பிட்டார்.

ஆனால் புதிய அமைப்பின் கீழ், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இலகு ரக வாகனங்களுக்கு மட்டுமே அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படும். கனரக வாகனங்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட மாட்டாது எனவும் அவர் தெரிபித்தார்.
000

Related posts: