கடலுக்கு சென்ற மீனவர் ஒருவர் மாயம் – காவலூர் பொலிசார் தகவல்,!

Tuesday, February 3rd, 2026


காரைநகர் துறைமுகத்திலிருந்து  மீன்பிடிக்க சென்ற மீனவர் ஒருவர் காணாமல் போய் உள்ளதாக ஊர்காவற்றுறை போலிசார் தெரிவித்தனர்.

குறித்த மீனவர் ஊர்காவற்றுறை பருத்தியடைப்பு பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஸ்கந்தராசா துஷாகரன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை மீன்பிடிக்க சென்றபோது படகின் பின் அணியத்திலிருந்து மீனவர் கடலில் தவறி விழுந்ததாக  கூறப்படுகிறது.

காணாமல் போன மீனவரை தேடும்பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
000

Related posts: