கடந்த நள்ளிரவுடன் முடிந்தது காலக்கெடு – அதிசிறப்பு வர்த்தமானி இன்று வெளியாகும் என எதிர்பார்ப்பு!

Saturday, May 31st, 2025

இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்களை குறிப்பிடும் வர்த்தமானி அறிவித்தல், தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்களை தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நேற்று (30) நள்ளிரவுடன் முடிவடைந்தது.

இந்நிலையிலையே அந்த பெயர்களைக் குறிப்பிடும் வர்த்தமானி அறிவித்தல் இன்று (31) தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட உள்ளது.

உறுப்பினர்களின் பெயர்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பிறகு, உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது 50 சதவீதம் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற கட்சியால் பரிந்துரைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கான தவிசாளர் மற்றும் உப தவிசாளரின் பெயர்களையும் தேர்தல் ஆணைக்குழு வர்த்தமானியில் வௌியிடவுள்ளது.

கடந்த பெப்ரவரி 17 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின் ஊடாக, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்,உள்ளூராட்சி நிறுவனங்களின் பதவிக்காலம் 2025 ஜூன் 2 ஆம் திகதி ஆரம்பிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளார்.

அதன்படி, உள்ளூராட்சி மன்றங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள், அவர்களின் பதவிக்காலம் ஆரம்பிப்பதற்கு முன்பு வர்த்தமானியில் வெளியிடப்பட வேண்டும்

மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்களை உடனடியாக தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்க உத்தரவிட்டு, கடந்த மே 27 ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழு வர்த்தமானி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

மாவட்ட பல்துறைசார் போசாக்கு திட்டத்தின் முன்னேற்றக்குழுக் கூட்டம் யாழ்.மாவட் செயலகத்தில்!
சுகாதார வழிமுறைகளை பின்பற்றாத பேருந்துகளின் அனுமதிப்பத்திரத்திரம் இரத்து - இலங்கை போக்குவரத்து சபை ...
சுற்றுலா பயணிகளுக்கு டொலர்களில் பயணச்சீட்டினை விற்பனை செய்வது குறித்து பரிசீலனை – அமைச்சர் பந்துல கு...