ஓய்வு பெற உள்ளதாக வெளியான செய்திகளுக்கு ரோகித் சர்மா மறுப்பு !

Saturday, January 4th, 2025

அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இந்த தொடரில் 4 டெஸ்ட் போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் 2-1 என்ற கணக்கில் அவுஸ்திரேலிய அணி முன்னிலை வகிக்கிறது.

இந்த தொடரில் பும்ரா தலைமையில் முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

அடுத்த 3 போட்டிகளில் 2 தோல்விகளைச் சந்தித்த இந்திய அணி கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பை தவற விட்டது.

அத்துடன் 2025ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிண்ண இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும் வாய்ப்பையும் இந்திய அணி கிட்டத்தட்ட இழந்துள்ளது எனலாம்.

இதனால் கடும் விமர்சனங்களைச் சந்தித்த ரோகித் சர்மா, அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 5ஆவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகினார்.

இதனால் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் வரலாற்றில் ஒரு தொடரின் பாதியிலேயே விலகிய அணித்தலைவராக ரோகித் சர்மா இடம்பெற்றுள்ளார்.

இதையடுத்து அவுஸ்திரேலிய தொடருடன் ரோகித் சர்மா ஓய்வு பெற உள்ளதாக செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில், ஓய்வு பெற உள்ளதாக வெளியான செய்திகளுக்கு ரோகித் சர்மா மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மதிய உணவு இடைவேளையின் போது கருத்து தெரிவித்துள்ள ரோகித் சர்மா,

தற்போது நடைபெறும் ஒரு போட்டியிலிருந்து மட்டுமே விலகியுள்ளேன். எப்போது ஓய்வுபெற வேண்டும் என்பதை நான் தான் முடிவு செய்ய வேண்டும்.

நான் எங்கும் செல்லவில்லை.  இங்கு தான் இருக்கிறேன்.  பும்ராவின் தலைமை பாராட்டத்தக்கதாக சிறப்பாக உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்

000

Related posts:

வவுனியாவில் டெங்கு நுளம்பு பரவும் அபாயம் – வீடகள் தோறும் சுகாதார தரப்பினர் விழிப்புணர்வு!
டெங்குத் நோயின் தாக்கம் அதிகரிப்பு – யாழ் மாவட்டத்தில் டிசெம்பர் 6 ஆம் திகதிமுதல் டெங்கு நுளம்பு கட்...
போராட்டத்தால் ராஜபக்சக்களின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியாது - அதற்கு இடமளிக்கப் போவதில்லை...