ஒலிபெருக்கிகள் மூலம் அதிக ஒலி எழுப்பப்பட்டால் கட்டுப்படுத்த பிரதேச செயலாளர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் – மாவட்ட செயலர் பிரதீபன் அறிவுறுத்து!

Friday, May 22nd, 2026

யாழ்ப்பாணத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஒலிபெருக்கிகள் மூலம் அதிக ஒலி எழுப்பப்பட்டால் அதனை கட்டுப்படுத்த பிரதேச செயலாளர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட செயலர் பிரதீபன் அறிவுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட சுற்றாடல் குழுக் கூட்டம் யாழ்.மாவட்ட செயலர் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் தலைமையுரையாற்றிய மாவட்ட செயலர் –

மாவட்ட மட்டத்தில் இருக்கும் உள்ளூர் அதிகார சபைகள் கழிவு முகாமைத்துவம் மட்டுமின்றி சுற்றாடல் சார்ந்த சூழல் சார்ந்த பாதுகாப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும்.

வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பொது நிகழ்வுகளில் பாவிக்கப்படும் ஒலிபெருக்கிகள் அனுமதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளையும் மீறி பொதுமக்களுக்கு குறிப்பாக மாணவர்கள் நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் பெரும் ஒலி எழுப்பப்படுவதாக பல முறைப்பாடுகள் கிடைக்க பெற்று வருகிறது.

அதிக ஒலி எழுப்பப்பட்டால் கிராம அலுவலர் ஊடாக அதனை கட்டுப்படுத்தும் பொறுப்பினை பிரதேச செயலாளர்கள் ஏற்க வேண்டும். மீறுவோர்கள் மீது கிராம அலுவலர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் பொலித்தீன் பிளாஸ்டிக் பாவனைகளை கட்டுப்படுத்தல் குப்பைகளை எரிவூட்டுவதனால் வளி மாசடைதல் மற்றும் வாணவேடிக்கைகளைல் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாகவும் பொது மக்களுக்கு உரிய விழிப்புணர்வுகளை வழங்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தெரிவித்தார்

000

Related posts:

தீர்வு தள்ளிப்போகுமானால் போராட்டம் வேறுவடிவில் திசைதிரும்பும் - பல்கலை மாணவர்கள் எச்சரிக்கை!
நீர் வற்றியமையால் 4 குளங்களின்கீழ் 53 ஏக்கரில் சிறுபோக செற்செய்கை -  கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்...
அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்தால் அனுமதிப்பத்திரங்கள் இரத்து - இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவ...

எதிர்வரும் ஜனவரி மாதம் 11 ஆம் திகதிமுதல் மீள திறக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அறிவிப்ப...
முகவர்களிடம் செல்வதற்கு முன் பணியகத்தை தொடர்புகொள்ளவும் தகவல்கள் அறிய 1989ஐ தொடர்பு கொள்ளலாம்!
புதியவர்களை உள்வாங்குவதும் மாற்றங்களை உருவாக்குவதும் அவசியம் - கட்சியின் தேசிய அமைப்பாளர் தோழர் கி.ப...