மேடை நாடக கலைஞர்களுக்கு ப்ரேக்ஷா விபத்து காப்புறுதியை ஆரம்பித்து வைத்தார் பிரதமர்!

Wednesday, March 17th, 2021

மேடை நாடக கலைஞர்களுக்கு அரசாங்கம் காப்புறுதி தொகையை செலுத்தி காப்புறுதியை வழங்குவது இலங்கை வரலாற்றில் முதல் முறையாக இடம் பெறுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேடை கலைஞர்களுக்கான விபத்து மற்றும் மருத்துவ காப்புறுதியை மேடை நாடக கலைஞர்களுக்கு வழங்கும் நிகழ்வின் தொடக்க விழாவின்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மரபுரிமை அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு மற்றும் டவர் மண்டப அரங்க அறக்கட்டளை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த ப்ரேக்ஷா விபத்து மற்றும் மருத்துவ காப்புறுதி ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தால் செயற்படுத்தப்படுகிறது.

அதற்கமைய, ஒரு உறுப்பினர் மரணித்தால் 2 இலட்சம் ரூபாயும், திடீர் மரணம் ஏற்பட்டால் 600,000 ரூபாயும், முழுமையாக ஊனமுற்றால் நான்கு இலட்சம் ரூபாயும், கடுமையான நோய் காப்புறுதிக்கு மூன்று இலட்சம் ரூபாயும், வைத்தியசாலையில் அனுமதிக்கு ஆண்டுக்கு அதிகபட்சம் 150,000 ரூபாயும், வெளிநோயாளர் சிகிச்சைக்கு ஆண்டுக்கு 15,000 ரூபாய் வரையிலும் வழஙக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: