ஐக்கிய அரபு இராச்சியத்திற்குச் செல்லும் ட்ரம்ப்!

Tuesday, April 1st, 2025

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அடுத்த மாதம் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு டிரில்லியன் டொலர்களை அமெரிக்க நிறுவனங்களில் முதலீடு செய்ய உள்ளதாக சவுதி அரேபிய அரசு தெரிவித்திருந்த நிலையிலேயே டொனால் ட்ரம்பின் பயண அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் ஓவல் அலுவலகத்தில் நடந்த நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திடும் விழாவில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அடுத்த மாதம் கட்டார்,  ஐக்கிய அரபு இராச்சியம்  (UAE) மற்றும் சவுதி அரேபியாவுக்குச் செல்லும் திட்டத்தை தெரிவித்தார்.

ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டபடி மே மாதத்தில் இப் பயணம் நடக்குமா என்று கேட்டபோது, அது அடுத்த மாதம் நடக்கலாம், ஒருவேளை சிறிது தாமதமாகலாம் என்று ட்ரம்ப் பதில் அளித்தார்.

பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு போன்ற துறைகளில் வளைகுடா நட்பு நாடுகளுடன் அமெரிக்க உறவுகளை வலுப்படுத்துவதே இப் பயணத்தின் நோக்கமாகும்.

சவுதி அரேபியா மற்றும் கட்டாரில் அமெரிக்காவின் முக்கிய இராணுவத் தளங்கள் உள்ளன, மேலும் பிராந்திய இராணுவ நடவடிக்கைகளில் அமெரிக்காவுக்கு ஐக்கிய அரபு இராச்சியம் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


சிறுவர்கள் பயமின்றி வைத்திய ஆலோசனையுடன் பைசர் தடுப்பூசியை பெற முடியும் - குழந்தைகள் வைத்திய நிபுணர் ...
நாட்டை முடக்காமல் கொவிட் பரவலை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைக்க வேண்டும் - சுகாதார சேவைகள் பிரதிப் பண...
காய்ச்சல், இருமல், தொண்டை புண், மூக்கடைப்பு, தசை அல்லது உடல் வலி, தலைவலி மற்றும் சோர்வு போன்ற அறிகுற...