ஏர்பஸ் விமானக் கொள்வனவில் மோசடி – முன்னாள் CEO கபில சந்திரசேன சடலமாக மீட்பு!

Friday, May 8th, 2026




ஏர்பஸ் விமானக் கொள்வனவில் பல கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) கபில சந்திரசேன, கொழும்பு 07 இல் உள்ள அவரது இல்லத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


இன்று காலை தனது வீட்டில் உயிரிழந்த நிலையில் அவர் கண்டெடுக்கப்பட்டார்.


இது குறித்து பொலிஸார் தற்போது தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


2 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சம் பெற்றதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில், இவரை உடனடியாகக் கைது செய்யுமாறு நேற்று (மே 7) தான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.


கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்திருந்த நிலையில், மீண்டும் கைது செய்யப்பட இருந்த தருணத்தில் இந்த உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது பலத்த சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது.


​மரணத்திற்கான உண்மையான காரணம் இது தற்கொலையா? அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா? என்பது பிரேதப் பரிசோதனையின் பின்னரே தெரியவரும்.


விமான சேவையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கின் முக்கிய சாட்சி/குற்றவாளி மறைந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts:


நெடுந்தீவு பகுதி மக்களது பிரச்சினைகள் தொடர்பாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர்கள் நேரில்  சென...
குடிநீர் வழங்கலை ஒரு சில மாதங்களுக்கு அனர்த்தகால நிவாரணமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஈ.பி.டி...
இந்திய மன்றம் மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அழைப்பு - அவுஸ்திரேலியாவிற்கு பயணமானார் ஜனாதிபதி ...