எல்லை நிர்ணய செயல்முறை முடிந்த பின்னரே, மாகாண சபைத் தேர்தல் – ஐ.நாவுக்கு அரசு அறிப்விப்பு!

Sunday, September 7th, 2025


……
எல்லை நிர்ணய செயல்முறை முடிந்ததும், மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படும் என்று இலங்கை அரசாங்கம், ஜெனீவா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துக்கு அறிவித்துள்ளது. 

இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்த அலுவலகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கைக்காக, அனுப்பப்பட்டுள்ள எழுத்துபூர்வ பதிலில் அரசாங்கம் இதனை தெரிவித்துள்ளது. 

13வது திருத்தத்தின் கீழ் மாகாண சபைத் தேர்தல்கள் 2014 முதல் நடத்தப்படவில்லை என்ற மனித உரிமைகள் ஆணையாளரின் கூற்றுக்கு பதிலாகவே அரசாங்கம் இந்த பதிலை வழங்கியுள்ளது. 

முன்னதாக 2025ஆம் ஆண்டில் அரசாங்கம் உள்ளூராட்சி தேர்தல்களை நடத்தியது. 
இந்தநிலையில், எல்லை நிர்ணய செயல்முறை முடிந்ததும் மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் தமது பதில் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
000

Related posts:


வழக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் முறை குறித்த விசேட சுற்றுநிருபம் -நீதிச் சேவைகள் ஆணைக்குழு!
வியாபாரிகள் மீதான அபராத தொகை அதிகரிப்பு – நாளைமறுதினம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக இராஜாங்க அம...
ரஷ்யாவில் இருந்து கொழும்புக்கு எரிபொருள் விநியோகத்தைப் பெற்றுக் கொள்ள புடினுடன் ஜனாதிபதி கோட்டாபய ரா...