எரிபொருள் தீர்ந்ததால் அனலைதீவு  கடற்பரப்பில் கரையொதுங்கிய இந்திய மீனவர்!

Thursday, October 16th, 2025


………..
இலங்கையை அண்டிய கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மூவர் படகில் எரிபொருள் தீர்ந்ததால் யாழ் அனலைதீவு  கடற்பரப்பில் தஞ்சமடைந்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற மூன்று மீனவர்கள் எரிபொருள் இன்றி காற்றின் வேகம் காரணமாக யாழ் அனலைத்தீவு கடற்கரையில் தஞ்சமடைந்துள்ளனர்

தஞ்சாவூர் மாவட்டம் கள்ளிவயல் தோட்டம் மீன்பிடி கிராமத்தில் இருந்து நேற்று (15) பைஸ் அக்ரம் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் புதுக்கோட்டை சேர்ந்த ராஜா (53) ராமநாதபுரத்தைச் சேர்ந்த குமார் (32) கள்ளிவயல் தோட்டத்தைச் சேர்ந்த முரளி (30) ஆகிய மூவர் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது திடீரென அவர்களது படகில்  இருந்து எரிபொருள் தீர்ந்ததால் படகு காற்றின் வேகம் காரணமாக இலங்கை யாழ்ப்பாணம்  அனலைத்தீவு கடற்பரப்பில் கரை ஒதுங்கியது.

இதனை கண்ட அப்பகுதி மீனவர்கள் இலங்கை கடற்படை, யாழ்ப்பாணம் மீன்வளத்துறை மற்றும் அனலைத்தீவு போலீசாருக்கு தகவல் வழங்கினர்

தகவல் அறிந்த அனலைத்தீவு போலீசார் மூவரையும் அனலைத்தீவு பொலிஸ் காவல்  நிலையத்திற்கு அழைத்து ஊர்காவற்றுறை  பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணைக்கு பின்னர் தமிழிக மீனவர்கள்  மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர் என யாழ் இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எரிபொருள் இன்றி  மீனவர்கள் மூவரும் அனலைத்தீவு கடற்பரப்பில் தஞ்சமடைந்தது ஊர்காவற்றுறை  போலிசார் நடத்திய விசாரணையில் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதையடுத்து
மூவரும்  நீதிமன்றத்தின் ஊடாக சிறை தண்டனையின்றி  படகுடன்  விடுதலை செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக இந்திய
துணை தூதரக அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
000

Related posts: