எந்தவொரு பயங்கரவாதத் தடைச்சட்டமும்  எங்களுக்குத் தேவையில்லை –  யாழ். பல்கலைச் சமூகம் போராட்டம்!

Thursday, February 19th, 2026


……..
இன்று (19)ஆரம்மிக்கப்பட்ட குறித்த போராட்டம் தொடர்ந்து (22) நான்கு நாள்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ளது

எந்தவொரு பயங்கரவாதத் தடைச்சட்டமும்  எங்களுக்குத் தேவையில்லை, அதை அரசு உடனடியாக இரத்துச்செய்யவேண்டும்  என வலுயுறுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சமூகத்தின் கையெழுத்துப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று (19)ஆரம்மிக்கப்பட்ட குறித்த போராட்டம் தொடர்ந்து (22) நான்கு நாள்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ளது.

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைபினை மீளப் பெறு என்றும் வலுவிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கு என்றும் வலியுறுத்தி பல்கலைக்கழக ஊழியர் சங்கம், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மற்றும் பல்கலைகழக மாணவர் ஒன்றியம் ஆகியன இணைந்தே குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

Related posts: