எதிர்வரும் 15 ஆம் திகதி டொனால்ட் ட்ரம்ப் – ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் சந்திப்பு – சர்வதேச ஊடகங்கள் தகவல்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்திக்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்பு எதிர்வரும் 15 ஆம் திகதி அலஸ்காவில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, யுக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான சாத்தியமான போர்நிறுத்தம் மற்றும் சமாதான உடன்படிக்கை குறித்து கலந்துரையாடவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி 2019 க்குப் பின்னர், இந்த இரண்டு தலைவர்களும், அமெரிக்க மண்ணில் தமது முதல் நேரடி சந்திப்பை நடத்தவுள்ளனர். யுக்ரைன் போர் நிறுத்தப்படவேண்டும்.
இல்லையேல் பொருளாதார தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா, ரஷ்யாவுக்கு விடுத்திருந்த காலக்கெடு நேற்று முடிவடைந்த நிலையில், இந்த சந்திப்பும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
Related posts:
பொதுநலவாய போட்டிகளில் இலங்கை சார்பில் 87 போட்டியாளர்கள் பங்கேற்பர்!
பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலையீடு - கோழி முட்டையின் விலையில் மாற்றம் - அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்...
நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறிய இந்திய மீன்பிடியாளர்கள் தாக்குதல் - கடற்படை வீரர் உயிரிழப்பு!
|
|