ஊடகவியலாளருக்கு  அச்சுறுத்தல் விடுத்த நபர்!

Tuesday, September 23rd, 2025


செய்தி சேகரிக்கச் சென்ற பெண் ஊடகவியலாளருக்கு நபர் ஒருவரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது 

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அலுவலகத்திற்கு முன்பாக சிவசேனை அமைப்பினரால்  உண்ணாவிரத போராட்டம் ஒன்று நேற்றையதினம் முன்னெடுக்கப்பட்டது. 

குறித்த போராட்டப் பகுதிக்கு செய்தி சேகரிக்கச் சென்ற பெண் ஊடகவியலாளருக்கே நபர் ஒருவரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.  

குறித்த பகுதியில் வாகனத்திலிருந்து இறங்கிய குறித்த நபர் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த  பெண் ஊடகவியலாளரிடம் அச்சுறுத்தும் வகையில் பேசியுள்ளார். 

அத்துடன் ஊடகவியலாளர்களால் தான் நாட்டிற்குப் பெரும் பிரச்சினை என்று  வாய்க்கு வந்தபடி பேசியுள்ளார்.

இது தொடர்பான காணொளி வெளிவந்து பெண் ஊடகவியலாளர் என்றும் பார்க்கமால் அடாத்தாக நடந்துள்ளமைக்கு கண்டனங்கள் வலுப்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது
000

Related posts: