உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று நள்ளிரவுடன் நிறைவு!
Monday, March 17th, 2025
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது.
எனவே, இதுவரை விண்ணப்பிக்காத தகைமையுள்ள விண்ணப்பதாரிகள் அஞ்சல் மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதைத் தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, இன்று நள்ளிரவு 12 மணிக்கு முன்னர், சம்பந்தப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகத்துக்கு நேரில் சென்று ஒப்படைக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ளது.
அதேநேரம், அஞ்சல்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் எந்த சூழ்நிலையிலும் நீடிக்கப்படாது எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
000
Related posts:
வடக்கு, கிழக்கில் தொடர்ச்சியாக மழை பெய்யும் - வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
ஒவ்வொரு வாக்காளரும் ஒரு வாக்கினை அளிப்பதற்கு மாத்திரமே தகுதியுடையவர் – வாக்காளர்களுக்கு தேர்தல்கள் ஆ...
ஹரினி அமரசூரிய - இந்திய உயர்ஸ்தானிகர் இடையே அவசர கலந்துரையாடல்!
|
|
|


