உரிய நேரத்தில் தேவையான நடவடிக்கை முன்னெடுக்கப்பவில்லை – முன்னாள் கடற்றொழில் அமைச்சர் குற்றச்சாட்டு!

Sunday, May 31st, 2026


~~~

வரையறைக்கு உட்பட்டு பல்வேறு தரப்புக்களின் ஊடாக முயற்சிகளில் ஈடுபட்டிருக்கின்ற போதிலும் இதுவரையில் திருப்திகரமான பதில் எதுவும் கிடைக்கவி்ல்லை என்று தெரிவித்துள்ள முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடலுக்கு போனவர்கள் உரிய நேரத்திற்கு கரை திரும்பவில்லை என்றதும், கடற்படையினரை அனுப்பி தேடுவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

பருத்திதுறை கடலில் காணாமல் போன கடற்றொழிலாளர்களின் வீடுகளுக்கு இன்று சென்று ஆறுதல் தெரிவித்த பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்த செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா,

கடந்த காலங்களில் இவ்வாறான அனர்த்தங்களின் போது, நேரடியாக சம்பவ இடத்திற்கு வந்து நின்று தான் முன்னெடுத்த நடவடிக்கைகளை, தற்போது தன்னை சந்தித்தவர்கள் நினைவுபடுத்தியதுடன், தற்போதைய நிலை பற்றிய ஆதங்கத்தினை வெளிப்படுத்தி இருந்ததையும் சுட்டிக்காட்டினார்.

Related posts:

சட்ட விரோத மணல் அகழ்வு குற்றச்சாட்டு தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்குமாறு மாவட்ட பிரதிப் பொலிஸ...
தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகர் சாமி காலமானார் -  ஞாயிரன்று இறுதிக்கிரியை - வேலணை சாட்டி இந்து மயா...
வட்டாரக் குழுக்களை  வலுப்படுத்துவது குறித்து மாவட்ட நிர்வாகத்துடன் டக்ள்ஸ் தேவானந்தா ஆராய்வு!