உணவை பாதுகாக்க யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடிய ஊடகவியலாளர்கள்!

Thursday, July 3rd, 2025

இலங்கையில் உணவுப் பாதுகாப்பை எவ்வாறு வலுப்படுத்துவது என்பது குறித்து யாழ் மாவட்ட பிரதேச ஊடகவியலாளர்களுக்கான   விழிப்புணர்வு செயலமர்வு ஒன்று இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

குறித்த செயலமர்வில் சுகாதார அமைச்சின் பிரதம உணவு மற்றும் பாதுகாப்பு பிரிவின் அதிகாரி சுதர்சன், வடக்கு மாகாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் மற்றும் துறைசார் அதிகாரிகள் கலந்து கருத்துரை வழங்கியிருந்தனர்.

யாழ் வலம்புரி விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற
குறித்த செயலமர்வு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு , ஐக்கிய நாடுகள் சபையின்  உணவு மற்றும் விவசாய அமைப்புடன் இணைந்து ஐரோப்பிய ஒன்றியக் குழுவின்  நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்டது.

இதில் யாழ் மாவட்டத்தை பிரதினிதித்துவம் செய்யும் பிரதேச ஊடகவியலாளர்கள் பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: