ஈ.பி.டி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் ஜெகனின் தாயாரது பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் அஞ்சலி!

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வே.குகேந்திரனின்(தோழர் ஜெகன்) தாயாரான பார்வதியம்மாவிற்கு செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தினார்.
அன்னாரின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பூதவுலுக்கு அஞ்சலி செலுத்திய செயலாளர் நாயகம், அம்மையாரின் பிரிவினால் துயருற்றிருக்கும் பிள்ளைகள் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதலையும் தெரிவித்தார்.
இதன்போது, செயலாளர் நாயகத்தின் பிரத்தியேக செயலாளர் கே. தயானந்தா, கட்சியின் யாழ். மாவட்ட நிர்வாக செயலரும் வலி மேற்கு பிரதேச சபை உறுப்பினருமான தோழர் ஜீவன், முன்னாள் வடக்கு மாகாண எதிர்க் கட்சித் தலைவர் தோழர் கமல், கட்சியின் யாழ் தலைமை அலுவலக நிர்வாக செயலர் தோழர் வசந்தன், வலி தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினரும் குறித்த பிரதேசத்திற்கான கட்சியின் நிர்வாகச் செயலருமான தோழர் ஜீவா, கட்சின் வட்டுக்கோட்டை பிரதேச நிர்வாக செயலர் தோழர் செல்வக்குமார் ஆகியோரும் கலந்து கொண்டு இறுதி அஞ்சலியை தெரிவித்தனர்.
Related posts:
|
|