ஈ.பி.டி.பியின் பிரதேச மட்ட செயற்பாடுகளை செழுமைப்படுத்த வலி தெற்கில் புதிய கட்டமைப்பு!

வலிகாமம் தெற்கு பிரதேசத்திற்கான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்(ஈ.பி.டி.பி) புதிய நிர்வாகக் குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது.
கட்சியின் செயற்பாடுகளை மேலும் வினைத் திறனாக முன்கொண்டு செல்லும் வகையில் கட்சியின் பிரதேச கட்டமைப்புக்கள் செழுமைப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில், குறித்த நிர்வாக தெரிவு இன்று இடம்பெற்றது.
அதனடிப்படையில், வலி தெற்கு பிரதேசத்திற்கான நிர்வாக செயலாளராக தோழர் இ. அரிகரன் நியமிக்கப்பட்டுள்ளதுடன், பிரதி நிர்வாகச் செலாளர்களாக தோழர் வெங்கடேஸ் ஸ்ரீ மற்றும் தோழர் வசீகரன் தனுஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில், இடம்பெற்ற புதிய நிர்வாகக் குழு தெரிவு தொடர்பான கூட்டத்தில், புதிய கட்டமைப்பை கட்டமைப்பதற்கான அக புற நிலைமைகளை ஆராய்வதற்காக செயலாளர் நாயகத்தால் நியமிக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட குழுவின் உறுப்பினர்களான கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், யாழ். மாவட்ட நிர்வாகச் செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன், உதவி நிர்வாகச் செயலாளர் ஐயாத்துரை சிறி ரங்கேஸ்வரன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் கந்தசாமி கமலேந்திரன், கட்சியின் தலைமை அலுவலக நிர்வாக பொறுப்பாளர் குணசிங்கம் – வசந்தன் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
Related posts:
|
|