ஈ.பி.டி.பியின் தென்னிலங்கையுடனான தேசிய நல்லிணக்கம் எப்போதும் வலுவாகவே இருக்கிறது- செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா

Saturday, October 5th, 2024

தென்னிலங்கையுடனான ஈ.பி.டிபியின் தேசிய நல்லிணக்கம் எப்போதும் வலுவாகவே இருப்பதாக சுட்டிக்காட்டிய செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, மத்தியில் உள்ள அரசாங்கத்தோடு ஆட்சியில் பங்கெடுப்பதற்கு நாடாளுமன்ற தேர்தல்களில் மக்கள் வழங்குகின்ற ஆணையின் பலமே அடிப்படையானது எனவும் தெரிவித்தார்.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் பருத்தித்துறை தொகுதிக்கான வட்டார உறுப்பினர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடிய வேளையிலேயே அவர் மேற்படி கருத்துக்களை தெரிவித்தார்.

உடுப்பிட்டியில் இன்று (05) பிற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் யதார்த்த அரசியலையும், ஈ.பி.டி.பி. கட்சியின் அரசியல் செயற்பாடுகளில் இருக்கின்ற நியாயத்தினையும் புரிந்துகொள்ளும் வகையில், கட்சியினால் மேற்கொள்ளப்படும் தேர்தல் பரப்புரைகள் அமைய வேண்டும் என்பதே தனது விருப்பமாகும். அதற்கான கடின உழைப்பு மிக அவசியம் எனவும் வலியுறுத்தினார்.

Related posts:


யாழ்ப்பாண மாவட்டத்தில் கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதற்கு ஆர்வமாக உள்ள முதலீட்டாளர்களுடன் அமைச்சர் டக்ளஸ...
அமைச்சர் டக்ளஸ் எடுத்துரைப்பு - நிறைவுக்கு வந்தது கடற்றொழிலாளர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம்!
மின்சார சபைக்குள்  மாபியா - மீண்டும் 4 முதல் 5 மணி நேரம் மின்சார தடை  ஏற்படும் அபாயம் - மின்சார சபை ...