பலாலி வடக்கிற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – பூர்வீக மக்களுக்கே முன்னுரிமை வேண்டும் என அன்ரனிபுரம் மக்கள் கோரிக்கை!

Friday, May 5th, 2023

அண்மையில் விடுவிக்கப்பட்ட பலாலி வடக்கு, அன்ரணிபுரம் காணிகளில் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படுகின்ற போது, தற்போதும் நலன்புரி முகாம்களில் வாழ்ந்து வருகி்ன்ற குறித்த கிராமத்தினை பூர்வீகமாக கொண்ட மக்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

பலாலி வடக்கிற்கான விஜயத்தினை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு பலாலி வடக்கு கடற்றொழிலாளர்களுக்கும் இடையில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போதே குறித்த விடயம் முன்வைக்கப்பட்டது.

குறித்த கோரிக்கை தொடர்பாக அவதானம் செலுத்தப்படும் என்று உறுதியளித்த கடற்றொழில் அமைச்சர், மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டிய  அன்ரணிபுரத்தினை சேர்ந்தவர்களின் பட்டியலை சமர்ப்பிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

அதேவேளை, கடற்றொழிலாளர்களின் தொழில் செயற்பாடுகளை விஸ்தரிக்கும் வகையில் இறங்குதுறையை ஆழப்படுத்தி தருமாறும், நூலகம் அமைப்பதற்கான காணி ஒன்றினை பெற்றுத் தருதல் உட்பட மேலும் சில கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.

குறித்த கோரிக்கைகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படும் என்று தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஆழப்படுத்தப்பட வேண்டிய இறங்குதுறையையும்பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது. – 05.05.2023

000

Related posts:

வருந்துயரை எதிர்கொண்டு வரலாற்றின் மாற்றத்தை உருவாக்கும் வல்லமையை பெறுவோம் – புதுவருடப்பிறப்பு தொடர்ப...
தமிழர் வாழ்விடங்கள் தோறும் புது மகிழ்ச்சி பொங்கிட தைப்பொங்கல் திருநாளை வரவேற்போம் - வாழ்த்தச் செய்தி...
வேலைத் திட்டங்கள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து அமைச்சின் செயலாளர் இந்து இரத்நாயக்கா உள்ளட்ட அதிகா...

முன்னாள் போராளிகளுக்கு வழங்கப்பட்ட கடனை இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்க முடியுமா? - புனர்வாழ்வு அ...
இந்தியாவிற்கு எதிராக எமது மக்களைப் பயன்படுத்த சீனா முயற்சிக்குமாயின் அதனை அனுமதிக்க முடியாது - அமைச...
இந்திய வெளியுறவு அமைச்சர்.ஜெயசங்கர் இலங்கை வருகை - நாளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா - இந்திய வெறியுறவு...