ஈரானுக்குக் கரம் கொடுத்த இலங்கை கடற்படை!
Wednesday, March 4th, 2026
…….
காலி துறைமுகத்திலிருந்து 40 கடற்படை மைல் தொலைவில் விபத்துக்குள்ளான ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Dena’ கப்பலில் 180 பேர் இருந்ததாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று பாநாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஈரானிய கடற்படையின் ‘IRIS Dena’ என்ற போர்க்கப்பல் நடுக்கடலில் விபத்துக்குள்ளாகி மூழ்கத் தொடங்கியதையடுத்து, இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை இணைந்து பாரிய மீட்பு நடவடிக்கையை முன்னெடுத்தன.
விபத்தின் போது கப்பலில் இருந்தவர்களில் 30 பேர் இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட அனைவரும் உடனடியாக கரைக்கு கொண்டு வரப்பட்டு, தற்போது காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் விஜித ஹேரத், இந்த விபத்து இலங்கையின் ஆட்புலக் கடற்பரப்பிற்கு வெளியே (சர்வதேச கடற்பரப்பில்) இடம்பெற்ற போதிலும், மனிதாபிமான அடிப்படையில் இலங்கை கடற்படை இந்த மீட்புப் பணியை முன்னெடுத்ததாகக் குறிப்பிட்டார்.
விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. எஞ்சியிருப்பவர்களைத் தேடும் பணிகளுக்காக இலங்கை விமானப்படையின் கண்காணிப்பு விமானங்களும் அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன
Related posts:
|
|
|


