ஈரானின் அதிரடி – ஜெருசலேமை அதிர வைத்த பாரிய சத்தம்!

Saturday, June 14th, 2025

ஜெருசலேம் மற்றும் டெல் அவீவ் ஆகிய நகரங்களை பாரிய சத்தத்துடன் ஈரான் ஏவுகணைகள் தாக்கியுள்ளன.

குறித்த தாக்குதல் இன்றையதினம் (14.06.2025) இஸ்ரேலிய நேரப்படி அதிகாலை 1.30 மணியளவில் நடத்தப்பட்டுள்ளது.

ஈரானில் இருந்து இஸ்ரேலை நோக்கி புதிய ஏவுகணை அலையொன்று ஏவப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இஸ்ரேல் முழுவதும் சைரன்கள் ஒலிக்க விடப்பட்டுள்ளதோடு பொதுமக்கள் தங்குமிடங்களுக்குத் திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல்களுக்கு பதிலடி அளிக்கும் விதமான அமைச்சரவைக் கூட்டம் இஸ்ரேலில் நடைபெற்றுள்ளது.

ஈரானுக்கு எதிரான தாக்குதல்களின் அடுத்த அலை விரைவில் நடத்தப்படும் என இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஈரானின் ஏவுகணை தாக்குதலில் இதுவரை 17 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈரானிய ஏவுகணைகள் இஸ்ரேல் முழுவதும் தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேலியப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. இஸ்ரேல் பாதுகாப்புப் படை இதனை ‘X’ தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.

இதேவேளை, நூற்றுக்கணக்கான பல்வேறு பெலிஸ்டிக் ஏவுகணைகள் இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்டுள்ளதாக ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான IRNA தெரிவித்துள்ளது.

இதேநேரம் ஈரானில் இருந்து இஸ்ரேலை நோக்கி புதிய ஏவுகணை அலையொன்று ஏவப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், இஸ்ரேல் முழுவதும் சைரன்கள் எச்சரிக்கைகள் ஒலிறத்தொடங்கியுள்ளதோடு, பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது

பொதுமக்கள் வசிக்கும் மையங்கள் மீது ஏவுகணைகளை வீசி ஈரான் “சிவப்புக் கோட்டைத் தாண்டிவிட்டது” என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் என தெரிவித்துள்ளார்.

இதன்படி, இந்த தாக்குதல்களுக்கு, மிகப் பெரிய விலையை கொடுக்க நேரிடும் என அவர் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக ஈரானின் அரசுத் தகவல் நிறுவனம் IRNA தெரிவித்துள்ளது.

இது, இஸ்ரேல் வெள்ளிக்கிழமை காலை மேற்கொண்ட தாக்குதலுக்கான ஈரானின் “தீவிர பதிலடி நடவடிக்கையின் தொடக்கம்” என விளக்கப்பட்டுள்ளது.

“தற்போதிய நிமிடங்களில், பலவகையான நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் ஆக்கிரமிக்கப்பட்ட பிராந்தியங்களை நோக்கி ஏவப்பட்டுள்ளன.

இது இஸ்ரேல் நடத்திய வன்கொடுமையான தாக்குதலுக்கு எதிரான தீர்மானமான பதிலடி நடவடிக்கையின் தொடக்கமாகும்,” என IRNA செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

இதன்படி, ஈரானிய ஏவுகணைகள் இஸ்ரேல் முழுவதும் தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேலியப் பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது.

இதேவேளை, தாக்குதலில் டெல் அவிவ் பெருநகரப் பகுதியில் பலர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

000

Related posts: