இஸ்ரேல் – ஈரான் போர் – ஜி7 மாநாட்டிலிருந்து பாதியிலேயே வெளியேறும் ட்ரம்ப்!
Tuesday, June 17th, 2025
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனடாவில் நடைபெறும் ஜி7 உச்சிமாநாட்டிலிருந்து பாதியிலேயே வெளியேறுவதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
ஈரான் – இஸ்ரேலுக்கு இடையிலான போர் காரணமாக மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிக்கும் நிலையில் அவர் வெளியேறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், டொனால்ட் ட்ரம்ப், இன்று அமெரிக்காவுக்கு புறப்படுவார் என வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.
தெஹ்ரானை விட்டு அனைவரும் உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை இட்டு இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
குறித்த பதிவில், “நான் கையெழுத்திடச் கூறிய ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட்டிருக்க வேண்டும். என்ன ஒரு அவமானம், மனித உயிர்களை வீணாக அழித்து கொண்டிருக்கின்றார்கள்.
எளிமையாகச் சொன்னால், ஈரான் அணு ஆயுதம் வைத்திருக்க முடியாது. நான் அதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தினேன். அனைவரும் உடனடியாக தெஹ்ரானை விட்டு வெளியேற வேண்டும்” என கடுமையாக எச்சரித்துள்ளார்.
000
Related posts:
|
|
|


